குவைத்தில் ஜஹ்ரா பகுதியில் பெரும் தீ விபத்து..!!

Kuwait fire accident jahra
Firefighters end massive fire at Jahra tire dump. (Photo : TimesKuwait)

குவைத்தின் வடமேற்கு ஜஹ்ரா பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் வடமேற்கு பகுதியில் உள்ள ஜஹ்ரா கவர்னரேட்டில் உள்ள ஒரு டயர் (Tyre) மயானத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

தகவலறிந்த தீயணைப்பு குழுக்கள் விரைவாக வடமேற்கு ஜஹ்ரா கவர்னரேட்டில் உள்ள டயர் மாயணத்திற்கு விரைந்தனர்.

குவைத் தீயணைப்பு சேவை இயக்குநரகம் செய்திக்குறிப்பில் கூறுகையில், நேற்று (அக்டோபர் 16) அன்று பிற்பகலில் ஜஹ்ரா கவர்னரேட்டில் உள்ள ஒரு டயர் மயானத்தில் ஒரு மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவிற்கு தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டது.

நான்கு தீயணைப்பு நிலையங்களின் தீயணைப்புப் படையினர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

தீயை முழுவதுமாக அணைக்குமுன் 25,000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு தீயிலிருந்து தனிமைப்படுத்த முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிஷ்டவசமாக இந்த தீ விபத்தில் எவ்வித உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று FSD உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter