குவைத்தின் சமூக விவகார அமைச்சகம் 120 வெளிநாட்டினரின் சேவைகளை நிறுத்தம்..!!

Kuwait expats terminated
Photo Credit : IIK

குவைத்தின் அமைச்சகத்தில் பணிபுரியும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அமைச்சர் ராணா அல் ஃபாரிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, நடப்பு நிதியாண்டான மார்ச் 2021 இறுதிக்குள் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அல்-ராய் செய்தி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

குவைத் சமூக விவகார அமைச்சகம் கடந்த மாதம் 120 வெளிநாட்டினரின் சேவையை நிறுத்தியுள்ளது என்று அல் ராய் செய்தி தெரிவித்துள்ளது.

பொதுத்துறையில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு பதிலாக நூறு சதவீதம் குவைத் மக்கள் பணிபுரிய விரும்புகின்றனர்.

குவைத்மயமாக்கல் என்ற கொள்கை முதன்முதலாக 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த கொள்கை வருகின்ற 2021 ஆம் ஆண்டுக்குள் பொதுத்துறையில் அதிகமாக குவைத் மக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அரசாங்க பதவிகளில் 120,000 வெளிநாட்டினர் பணியாற்றினர்.

இந்நிலையில், கடந்த மாதங்களில் அதிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொதுத்துறையில் 79 சதவீத குவைத் மக்களும் மற்றும் 21 சதவீத வெளிநாட்டினரும் பணியாற்றி வருகின்றனர் என்று சிவில் சர்வீஸ் கமிஷன் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, செப்டம்பர் 2017 முதல் 16 அரசு நிறுவனங்களில் 13 நிறுவனம் குவைத்மயமாக்கலை அடைந்துள்ளது என்று சிவில் சர்வீஸ் கமிஷன் தெரிவித்துள்ளது.

மேலும், பல்வேறு அரசு நிறுவனங்களில் வெளிநாட்டினரை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter