குவைத் பொதுப்பணித்துறையில் இருந்து 400 வெளிநாட்டு ஊழியர்கள் பணிநீக்கம்..!!

400 expat employees terminated in MPW
400 expat employees terminated in MPW. (Photo : Economic Times)

குவைத் பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வந்த 400 வெளிநாட்டு ஊழியர்களின் சேவைகளை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் பொதுப்பணித்துறை அமைச்சரும், வீட்டுவசதி அமைச்சருமான டாக்டர் ராணா அல்-ஃபாரெஸ் கூறுகையில், அமைச்சகத்தின் பல்வேறு துறைகளில் 400 வெளிநாட்டு ஊழியர்களின் சேவைகளை நிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இதற்கு முன்னர் 150 ஊழியர்களின் சேவைகள் முதலில் நிறுத்தப்பட்டுருந்ததாக அல் ராய் தினசரி ஆதாரங்களை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

இந்த பணிநீக்க பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பெயர்கள் சில தொழில்நுட்ப தொழில்களுக்கு மேலதிகமாக நிர்வாக மற்றும் சட்ட பதவிகளில் பணிபுரியும் வெளிநாட்டினர் என்றும் therivikapatullathu .

குவைத்மயமாக்கல் கொள்கையின் ஒரு பகுதியாக குவைத் நாட்டினருக்காக அனைத்து வெளிநாட்டு ஊழியர்களின் சேவையை பொதுப்பணித்துறையில் நிறுத்தவுள்ளதாக அமைச்சர் அல்-ஃபரிஸ் தெரிவித்தார்.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

பணிகள் அமைச்சகம் மற்றும் சாலைகளுக்கான பொது அதிகாரசபையில் 550 ஊழியர்களைக் கொண்ட வெளிநாட்டு ஊழியர்களின் சேவைகளை முடிவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நடப்பு ஆண்டு இறுதிக்குள் கடைசி தொகுதி முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

MPW மற்றும் பொது சாலைகள் ஆணையத்தில் உள்ள அனைத்து வெளிநாட்டு ஊழியர்களின் சதவீதமும் அமைச்சகத்தின் மொத்த ஊழியர்களில் 5 சதவீதத்தை தாண்டவில்லை, மேலும் அமைச்சர் அல்-ஃபாரெஸ் குவைத்திகளுக்கு பதவிகளை வகிக்கவும், வரவிருக்கும் ஆண்டுகளில் பொறுப்பை ஏற்கவும் பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter