குவைத்தில் போக்குவரத்து குற்றங்களை கண்காணிக்க ட்ரான் வசதி அறிமுகம்..!!

Kuwait drone Trafic
Photo Credit : Times Kuwait

குவைத்தில் நடக்கும் குற்றங்களை கண்காணிக்க போக்குவரத்துத் துறை தற்போது ட்ரான் முறையை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

குற்றங்களை கண்டறிய சமீபத்திய நாட்களில் இந்த சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

இதற்க்கான முதல் கட்ட பரிசோதனை அக்டோபர் 27 அன்று செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த முறை மூலம் வாஃப்ரா பகுதியில் கண்காணிப்பின் போது ஆபத்தான போக்குவரத்து மீறல்களின் காட்சிகளை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

அதாவது அந்த பகுதியில் மூன்று வாகனங்கள் அதிவேகமான வேகத்தில் ஓட்டிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றவாளிகள் இதை மறுத்தனர் ஆனால் ட்ரான் காட்சிகளை ஆதாரமாக கொண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தனர்.

அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ட்ரோன்களில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் போக்குவரத்து சட்டத்தை மீறப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரமாக போக்குவரத்து நீதிமன்ற நீதிபதிக்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter