கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக WHO-விற்கு $40 மில்லியன் டாலர் குவைத் நன்கொடை..!!

Foreign Minister Sheikh Dr Ahmad Nasser Al-Mohammad Al-Sabah speaks during a video conference call with heads of Kuwait’s diplomatic missions in several European countries yesterday. (photo : Kuwait Times)

கொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதிலிருந்து தடுப்பதற்காக குவைத் அரசு உலக சுகாதார அமைப்புக்கு (WHO) $40 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளது.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச அமைப்பின் முயற்சிகளுக்கு உதவும் விதமாக அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக துணை வெளியுறவு மந்திரி கலீத் அல்-ஜரல்லா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

குவைத் வெளியுறவு மந்திரி ஷேக் Dr. அஹ்மத் நாசர் அல்-முகமது அல்-சபா அவர்கள் ஈரானிய பிரதிநிதியான முகமது ஜவாத் ஜரீப் அவர்களை தொடர்புகொண்டு கொரோனா வைரஸின் நிலையை குறித்து பேசினார்.

தொலைபேசி உரையாடலின் போது, உலக சுகாதார அமைப்பின் மூலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அறிவுறுத்தலின் பேரில் ஈரானுக்கு உதவி வழங்கியுள்ளதாக குவைத் மந்திரி தெரிவித்தார்.

ஈரானிய வெளியுறவு மந்திரி அவர்கள் குவைத் அரசால் எடுக்கப்பட்டுள்ள இந்த மனிதாபிமான முயற்சிக்கு தனது நாட்டின் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

source : Kuwait Times