குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 20 நாடுகளுக்கு ஆகஸ்ட் 1 முதல் விமான சேவை தொடக்கம் – DGCA

Kuwait DGCA restarts flights to 20 countries. (photo : Arab Times)

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் இயங்கும் விமான நிறுவனங்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் உலகளவில் 20 நாடுகளுக்கு வர்த்தக விமானத்தைத் தொடங்கவுள்ளதாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) இன்று (ஜூலை 28) அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், ஓமான், லெபனான், கத்தார், ஜோர்டான், எகிப்து, போஸ்னியா, ஹெர்சகோவினா, இலங்கை, பாகிஸ்தான், எத்தியோப்பியா, யுனைடெட் கிங்டம், துருக்கி, ஈரான், நேபாளம், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, அஜர்பைஜான் , பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு விமான சேவையை தொடங்கவுள்ளளதாக DGCA-வின் விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநர் அப்துல்லா அல்-ராஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், விரைவில் விமான நேரங்கள் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து பயணிகளும் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms