குவைத்தில் இருந்து பத்து மாதங்களில் 13,000 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தல்..!!

Kuwait deport expats
Photo credit : Times Kuwait

குவைத்தில் உள்ள 13,000 வெளிநாட்டவர்கள் தங்கள் நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, நாடு கடத்தப்பட்டவர்கள் குற்றவாளி வழக்கு உள்ளவர்கள் என்றும் தவறான செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

இந்தாண்டு துவக்கத்திலிருந்து அக்டோபர் 27 வரை 13,000 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

உள்துறை அமைச்கத்தின் துணை செயலாளர் முடிவால் நாடு கடத்தப்பட்டவர்களில் சிலர் பொது நலனுக்காக வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது என்று அல் கபாஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

தற்போது 900 ஆண்கள் மற்றும் பெண்கள் நாடு கடத்தப்பட்ட சிறையில் உள்ளனர்.

இதனை தொடர்ந்து, கூட்ட நெரிசலைத் தடுப்பதற்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு புதிய வார்டுகள் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் 34,000 பேர்களும் மற்றும் 2019 இல் 40,000 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடும்போது நாடு கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று அல்-கபாஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter