குவைத்தின் மகுட இளவரசர் அமீர் ஷேக் நவாபிற்கு நன்றி கடிதம்..!!

Kuwait Crown prince thanked Amir
Kuwait Crown prince thanked Amir. (Photo Credit : KUNA)

குவைத்தின் அமீர் தன் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி தெரிவித்த மகுட இளவரசர்.

குவைத்தின் மகுட இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்கள் தன்னை வாரிசாக பரிந்துரைத்த அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

குவைத்தின் மகுட இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்கள் அமீர் தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி கூறினார்.

மேலும், குவைத் அமீர் விரிவான வளர்ச்சி மற்றும் நவீன மறுமலர்ச்சியை அடைவதற்கு அனைத்து வல்லமையுள்ள இறைவனிடம் மகுட இளவரசர் பிரார்த்தனை செய்வதாக கூறினார்.

இதனை தொடர்ந்து, தேசிய சட்டமன்ற சபாநாயகர் மர்சுக் அல்-கானிம் மற்றும் பிரதம மந்திரி ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமாத் அல்-சபா அவர்களும் (அக்டோபர் 08) வியாழக்கிழமை மகுட இளவரசருக்கு அனுப்பிய கடிதத்தில் வாரிசாக புதிய பதவியை ஏற்றுக்கொண்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

இக்கடிதத்தில், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் சார்பாகவும், இப்பதவிக்கு அமீரின் நம்பிக்கை மற்றும் பரிந்துரையை வென்றதற்காக ஷேக் மிஷாலை தேசிய சட்டமன்ற சபாநாயகர் மற்றும் பிரதம மந்திரி அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும், குவைத்தின் மகுட இளவரசர் ஷேக் மிஷாலை அவர்களை சிறந்த ஆதரவாளராக இருப்பார் என்று அமீர் அவர்கள் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter