அதிகரித்து வரும் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த குவைத் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது..!!

Kuwait COVID-19 Restrictions
Photo Credit : IIK

குவைத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகளவில் பரவி வருவதால் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றின் வழக்குகள் கடந்த (அக்டோபர் 16) வெள்ளிக்கிழமை நான்கு லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

இதனை தொடர்ந்து, நோய்த்தொற்றுகளின் முதல் அலைகளைத் தணிக்க முடிந்தபோதிலும் தற்போது வழக்குகள் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 663 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் பாராளுமன்றத்தில் கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்கு மற்றும் கட்டுப்படுத்துவதற்கு புதிய வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றனர்.

கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

மேலும், முகக்கவசம் அணியாதவர்கள் 100 தீனார் அபராதம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் கவுன்சில் சட்டத்தில் சேர்த்துள்ளது என்று உள்ளூர் ஊடகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter