மறைந்த குவைத் அமீருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புர்ஜ் கலீஃபாவில் அவரது புகைப்படம்..!!

burj khalifa lights up for the honour of Late Amir
Burj khalifa lights up for the honour of Late Amir. (Photo : Twitter)

குவைத் தனது அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் காலமானதற்கு துபாய் இரங்கல் தெரிவித்துள்ளது.

குவைத்தில் மறைந்த 91 வயதான அமீர் இறந்த ஒரு நாள் கழித்து, உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவில் அமீரின் புகைப்படத்துடன் இரங்கல் செய்தி தெரிவிக்கப்பட்டுருந்தது.

மறைந்த அமீரின் படம் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கட்டிடத்தின் மீது விலங்குகள் மூலம் தோன்றப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டுருந்தது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

இந்த சம்பவத்தின் காணொளி ட்விட்டரில் தலைப்புடன் வெளியிடப்பட்டது “குவைத் தேசத்துக்கும் அதன் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அவருடைய ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்” என்ற தலைப்புடன் காணொளியில் தோன்றியது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்துவந்த குவைத்தின் தலைவர் அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) காலமானார்.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

பின்னர், புதன்கிழமை (செப்டம்பர் 30) அன்று ஷேக் நவாஃப் அல் அகமது அல் சபா அரசியலமைப்பு சத்தியப்பிரமாணம் செய்து குவைத்தின் 16 வது அமீராக பதிவியேற்றார்.

பதவியேற்றதைத் தொடர்ந்து, அமீர் ஷேக் நவாஃப் தேசிய சட்டமன்றத்தில் (நாடாளுமன்றம்) ஒரு அறிக்கையை வழங்கினார், அதில் மறைந்த அமீர் ஷேக் சபாவின் வழிகாட்டுதல்களை நாங்கள் பெருமையுடன் நினைவில் கொள்வோம், இது தொடர்ந்து ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter