குவைத்தில் நிலக்கரியை (Coal) எரித்தால் 250KD அபராதம் – பொதுமக்களுக்கு EPA எச்சரிக்கை

Kuwait coal EPA
Photo Credit : Q8india

குவைத்தில் நிலக்கரியை (Coal) எரித்தால் 250KD அபராதம் என்று EPA பொதுமக்களை எச்சரித்துள்ளது.

குவைத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பொதுமக்கள் உறுதியுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை சுற்றுச்சூழல் பொது ஆணையம் (EPA) வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

குறிப்பாக இப்போது நல்ல வானிலை மற்றும் முகாம் (camping) தடை காரணமாக அதிக மக்கள் சுற்றுலாவிற்கு செல்கிறார்கள் என்று அல்-கபாஸ் தினசரி தெரிவித்துள்ளது.

கழிவுகளை விட்டுச் செல்வதைத் தவிர்க்கவும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலக்கரியைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கவும், குறிப்பாக நிலக்கரியை நேரடியாக தரையில் பற்றவைக்கும் நடைமுறை குறித்து அதிகாரம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.

சுற்றுச்சூழல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நிலத்தில் நிலக்கரியைப் பற்றவைப்பதற்கு, பொருத்தமான உபகரணங்களைப் பயன்படுத்தாவிட்டால், சட்டத்தால் தண்டிக்கப்படுவார்கள்.

மேலும், KD250 அபராதம் விதிக்கப்படும் என்று EPAவின் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஷீகா அல்-இப்ராஹிம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter