குவைத்திலிருந்து இந்தியாவுக்கு மீட்பு விமானங்களை இயக்க குவைத் விமான ஆணையம் ஒப்புதல்..!!

Kuwait clears the way for India to bringback thier citizens. (photo : TheHindu)

குவைத்திலிருந்து இந்தியர்களை மீட்பதில் இருந்த தடங்கல் தற்போது நீங்கியுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இதையடுத்து, கொரோனா மீட்பு நடவடிக்கையான வந்தே பாரத் திட்டத்தின் கீழ் குவைத்திலிருந்து இன்று (மே 9) சனிக்கிழமை முதல் முறையாக நேற்று இயக்கவிருந்த ஹைதராபாத் மற்றும் இன்று இயக்குவதற்கு திட்டமிட்ட கொச்சி விமானம் இரண்டும் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பின்படி, ஹைதராபாத் விமானம் காலை 11:25 மணிக்கு குவைத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு ஹைதராபாத்தை சென்றடையும், இரண்டாவது கொச்சி விமானம் குவைத்திலிருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு கொச்சியை சென்றடையும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

முன்னர் குவைத்திலிருந்து பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட இந்தியர்களை அழைத்துச் செல்வது தொடர்பாக குவைத் அரசின் கோரிக்கையை இந்திய அரசு மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு குவைத்தில் இறக்குவதற்கு அனுமதி வழங்க குவைத் விமான போக்குவரத்து அணைய அதிகாரிகளும் நேற்று மறுத்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்திலிருந்து முதல் ஏழு நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள பட்டியல் அடிப்படையில் மொத்தம் 5 விமானங்கள் இயக்கப்படுகிறது, இதில் சென்னைக்கு ஒரு விமானம் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.