கொரோனா வைரஸ்; குவைத்தில் எந்த பாதிப்பும் இல்லை..!

Checking at Kuwait Airport with thermal cameras for corona virus infection.

குவைத் நாட்டில் தற்போது வரை எந்த ஒரு கொரோனா வைரஸ் பாதிப்பும் கண்டறியவில்லை என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (30-01-2020) வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை எந்தவொரு நபரையும் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் கண்டறியவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

MOH இன் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் அப்துல்லா அல் சனத் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நோயைத் தடுக்க அமைச்சகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் மேலும், தொற்றுநோய் நாட்டிற்கு பரவாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மற்ற உத்தியோகபூர்வ துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.