தடைவிதிக்கப்பட்ட 32 நாடுகளில் இருந்து நேரடி charter விமானங்களை இயக்க அனுமதி..!!

Direct charter flight are allowed from 32 countries
Direct charter flight are allowed from 32 countries. (Photo : IIK)

குவைத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்ட 32 நாடுகளில் இருந்து நேரடியாக chatered விமானங்கள் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு வெளிநாட்டு நிறுவனங்களும், தங்கள் வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களை அழைத்து வர விரும்பினால், தேவையான ஒப்புதல் கிடைத்த பின்னர் chartered சேவையைப் பயன்படுத்தலாம் என்று உள்ளூர் அரபு செய்தித்தாள் அல் அன்பா ஆதாரங்களை மேற்கோள் காட்டி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

முன்னதாக, இந்த பிரிவில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் ஒப்புதலுக்குப் பிறகு குவைத்துக்குள் நுழையக்கூடிய பத்து பிரிவுகளுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்து அனுமதி வழங்கி இருந்ததாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்த பிரிவுகளில் பணிபுரியும் வெளிநாட்டினரின் பெயர்களையும் தொழிலையும் அரசாங்க ஏஜென்சி அவர்களின் ஒப்புதலுக்காக கொரோனா அவசரக் குழுவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

முன்னதாக சுகாதார அமைச்சகம், கல்வி அமைச்சகம் இதுபோன்ற வெளிநாட்டினரின் ஊழியர்களின் பட்டியலை குவைத்துக்கு அழைத்து வருவதற்காக சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டது, குறிப்பாக கூட்டங்களை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter