குவைத் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்..!!

Kuwait Cabinet meeting
Photo credit : IIK

குவைத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் நடைபெற்ற சுகாதாரத்துறையின் விதிகளை கடைபிடிக்காமல் தவறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது மற்றும் சிறையில் அடைப்பது உள்ளிட்ட பல்வேறு கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சகத்திற்கு அதிகாரம் வழங்கும் ஃபத்வா சட்டமன்றத்திற்கு ஒப்புதல் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு உடனடியாக அபராதம் 50 முதல் 100 தினார்கள் வரை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சுகாதார துறையின் நோய்தொற்று பரவல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பயனுள்ளதாக இல்லாவிட்டால் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சகம் அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், கடுமையான சுகாதார மீறல்களில் ஈடும் நபர்களுக்கு சிறைத்தண்டனை உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறி வீட்டில் திருமணங்கள், கொண்டாட்டங்கள், கூட்டங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதற்கு எதிராக கண்காணிப்பு கடுமையாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

நாட்டிற்குள் நுழைவதற்கான தடை விதிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட 34 நாடுகளுக்கு தற்போதுள்ள தடை தொடர்ந்து நீட்டிக்கப்படும்.

மேலும், வெளிநாட்டினருக்கான 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் தொடரும் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

குளிர்கால தொடங்குவதால் கூடாரங்கள் மற்றும் உள் கூடாரங்கள் அமைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter

Related posts

குவைத்தில் கொரோனா அவசர அமைச்சரவை குழுவின் ஒப்புதல் இல்லாமல் புதிய விசா வழங்கப்படாது..!!

Editor

குவைத்தில் குடியிருப்பு மாற்றம் மற்றும் வாகன உரிமை மாற்றம் போன்ற சேவைகள் ஜூன் 30 முதல் தொடங்கும் – MOI

Editor

குவைத்தில் இரண்டு இடங்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு..!!

Editor