குவைத் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்…

Kuwait cabinet decisions
Photo Credit : Arab Times

குவைத் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பின்வருமாறு :

மறு அறிவிப்பு வரும் வரை வெளிநாட்டில் இருந்து குவைத் வருபவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் தொடரும்.

தடை செய்யப்பட்ட இந்திய உட்பட 34 நாடுகளுக்கு நேரடியாக நாட்டிற்குள் நுழைவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

தற்போதைய சுகாதார நிலைமை மற்றும் முன்னேற்றங்கள் குறித்து மதிப்பாய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார அமைச்சர் Dr. பசில் அவர்கள் இது குறித்து அமைச்சரவையில் விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைவிதிக்கப்பட்ட 34 நாடுகள் பட்டியலில் இருந்து எந்தவொரு நாட்டையும் நீக்கவோ அல்லது சேர்க்கவோ இல்லை.

தடைசெய்யப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு குவைத்தில் உள்ள ஹோட்டல்களில் ஒரு வார காலத்திற்கு நிறுவன தனிமைப்படுத்தல் (Institutional Quarantine) என்ற தீர்மானம் குறித்து எதுவும் பேசப்படவில்லை.

குவைத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வேட்பாளர்களின் எந்தவொரு கூட்டங்களையும் நடத்த அனுமதி இல்லை.

மேலும், இந்த முடிவு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்கவும், மீறுபவர்கள் மீது கடும் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter