குவைத் கூட்டுறவு சங்கங்களில் பிரெஞ்சு தயாரிப்புகள் வெளியேற்றம்..!!

Kuwait Boycott france
Photo credit : Alqabas

குவைத்தில் உள்ள ஐம்பது கூட்டுறவு சங்கங்கள் பிரெஞ்சு தயாரிப்புகளை விற்பனை நிலையங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது என்று அல் கபாஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

பிரான்சில் முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேலி செய்யும் விதத்தில் கேலிச்சித்திரங்களை வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரெஞ்சு தயாரிப்புகள் அப்புறப்படுத்தப்பட்டது.

#BoycottFrance என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் டிரெண்ட் ஆகியுள்ளது.

இதனை தொடர்ந்து, ஆன்லைன் அழைப்புகளின் ஆதரவைப்பெற்ற பின்னர் முஸ்லீம் நாடுகளில் உள்ள பிரெஞ்சு தயாரிப்புகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

கூட்டுறவு வாரியத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைத்து பிரெஞ்சு தயாரிப்புகளை புறக்கணிப்பதாக அல் கபாஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

குவைத் வெளியுறவு அமைச்சகம் பிரெஞ்சு வெளியிட்டுள்ள தாக்குதல் கார்ட்டூன்கள் “மிகுந்த அதிருப்தியை” ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்த கார்ட்டூன்கள் வெறுப்பு, பகை மற்றும் வன்முறையைத் தூண்டுகின்றது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter