34 நாடுகளுக்கான தடை தொடரும்; மேலும் சில நாடுகள் சேர்க்கப்படலாம்..!!

Kuwait Banned countries
Photo Credit : ArabTimes

குவைத்தில் 34 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மீதான நேரடி நுழைவுத் தடையை நீக்குவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை இன்னும் நிலுவையில் உள்ளதால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதையும் படிங்க : சவுதி அரேபியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்கவுள்ளதாக குவைத் ஏர்வேஸ் அறிவிப்பு..!!

தடைசெய்யப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மீதான தடையை நீக்க குவைத் ஏர்வேஸ் அதிகாரிகள் கடந்த வாரம் சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொற்று நோய் பாதிப்பு அளவின் அடைப்படையில் தடைவிதிக்கப்பட்டுள்ள நாடுகளை இரண்டு பிரிவுகளாக பிரிக்க வேண்டும்.

மேலும், நிபந்தனைகளுடன் தடைவிதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பயணிகளை குவைத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தொற்று அதிகமாக உள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மொத்தம் 3 முறை PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

தொற்று குறைவாக உள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மொத்தம் 2 முறை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

கொரோனா கிருமித்தொற்றின் காரணமாக இந்தியா உட்பட 34 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு குவைத்துக்குள் நேரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter