34 நாடுகளுக்கு பயணத்தடையின் எதிரொலி; குவைத்திற்கு KD100 மில்லியன் இழப்பு..!!

Kuwait banned countries losses
Photo Credit : IIK

குவைத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 34 நாடுகளுக்கு விமான சேவையை தடை செய்துள்ளது.

இதனை தொடர்ந்து, தடை செய்துள்ள நாட்டிலிருந்து 160,000 வெளிநாட்டினர் வெளியேறுகின்றனர்.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

பெரும்பாலான வெளிநாட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட 14 நாட்களை கழிக்க துபாயை ஒரு போக்குவரத்து நாடாக தேர்ந்தெடுத்து பின்னர் குவைத் திரும்புகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துபாய் மற்றும் பிற நாடுகள் பயணிகளுக்கு “போக்குவரத்து குடியிருப்பு” வழங்கி சம்பாதித்துள்ளது.

இதனை தொடர்ந்து, டிக்கெட், ஹோட்டல் மற்றும் போக்குவரத்து என ஒரு நபருக்கு 600 தீனார் செலவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ள து.

இந்நிலையில், குவைத் நூறு மில்லியன் டாலர்கள் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் பயண அலுவலக கூட்டமைப்பின் உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அல்-கராஃபி அவர்கள் அல்-கபாஸ் செய்தித்தாளுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், விமான சேவையை மீண்டும் தொடங்க விமான நிறுவனங்கள் குவைத் விமான நிலையத்திற்கு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter