கொரோனா வைரஸ்; குவைத் வங்கிகள் 10 மில்லியன் குவைத் தினார் நன்கொடை..!!

Kuwait banks donate £32m to combat coronavirus. (photo : KMEN)

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவாக 10 மில்லியன் குவைத் தினார்கள் (32 மில்லியனுக்கும் அதிகமான) மதிப்புள்ள நிதியை ஒதுக்குவதாக குவைத் மத்திய வங்கி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

வைரஸை எதிர்ப்பதற்கான நாட்டின் அதிகாரபூர்வ முயற்சிகளுக்கு அவர்களின் பங்களிப்பாக குவைத் வங்கிகள் இந்த நிதியை வழங்குகிறது என்று குவைத் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தில் மத்திய வங்கி இந்த நிதியை நிர்வகிக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக குவைத் செய்தித்தாளான அல்-கபாஸ் (Al-Qabas) தெரிவித்துள்ளது.

குவைத் மத்திய வங்கியின் ஆளுநர் Mohammad Y. Al-Hashel கூறுகையில், “இந்த முயற்சி வங்கித் துறையின் தேசிய கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக வருகிறது, ஏனெனில் இந்த நிதி நோய் பரவுவதிலிருந்து தடுப்பதற்கான பல்வேறு அரசாங்க நடவடிக்கைகளுக்குத் தேவையான அவசரத் தேவைகளை வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

source : KMEN