Pfizer தடுப்புமருந்தை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த குவைத் ஒப்புதல்

Kuwait approves Pfizer vaccine
Kuwait approves emergency use of Pfizer vaccine

Pfizer/BioNTech கோவிட் -19 தடுப்புமருந்தை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த குவைத் சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தடுப்பூசி குறித்து விரிவான மதிப்பீடு செய்து மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளை குழு மதிப்பாய்வு செய்த பின்னர் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் குவைத் திரும்புவதற்கு அனுமதி!

இதனை, சுகாதார அமைச்சின் மருந்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு விவகாரங்களுக்கான உதவி துணை செயலாளர் அப்துல்லா அல் பதர் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

COVID-19 தடுப்புமருந்து குழுவின் உறுப்பினர் டாக்டர் கலீத் அல் சயீத் Al Jaridaவிடம் கூறுகையில், நாள் ஒன்றுக்கு சுமார் 10,000 பேருக்கு தடுப்புமருந்து செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதில் முன்னணி ஊழியர்கள், முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த வாரம், கோவிட் -19 தடுப்புமருந்து பெற பதிவு செய்ய விரும்புவோருக்கான வலைத்தளத்தை குவைத் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter