குவைத்தில் மேலும் 10 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு..!!

Worshippers wearing protective masks perform at a mosque in Kuwait City on February 28, 2020. (photo : Gulfnews)

குவைத்தில் புதிதாக 10 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது, தற்போது மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து COVID-19 நோயாளிகளும் நிலையான நிலையில் உள்ளதாகவும் மற்றும் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாக அமைச்சகம் தெரிவித்தது.

சுகாதார அமைச்சகத்தின் பொது சுகாதார விவகாரங்களுக்கான உதவி துணை செயலாளர் Dr. Buthaina Al Mudhaf அவர்கள் குறிப்பாக கூட்டங்களைத் தவிர்ப்பது தொடர்பாக அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்கவும், பின்பற்றவும் பொதுமக்களுக்கு வலியுறுத்தினார்.

source : Gulf News