சவுதி ஒட்டக விழாவில் குவைத்தின் இளவரசர் மற்றும் அவரது பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்..!!

Kuwait Amir’s representative attends Saudi Camel Festival. (Image credit : kuwait times)

குவைத்தின் அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா, இளவரசர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா மற்றும் அவரது பிரதிநிதிகள் குழுவுடன் நேற்று ரியாத்தில் நடைபெற்ற நான்காவது கிங் அப்துல்அஜிஸ் ஒட்டக நிறைவு விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் இளவரசர் அவர்கள் சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அவர்களால் நடத்தப்பட்ட மதிய உணவிலும் கலந்து கொண்டார்.

ஷேக் நவாஃப் அவர்கள் நேற்று முன்னதாக ரியாத்துக்கு வந்தடைந்தார் அங்கு அவரை இளவரசர் கலீத் சர்வதேச விமான நிலையத்தில் இளவரசர் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் அப்துல்ஸீஸ், ரியாத்தின் துணை ஆளுநர் மற்றும் சவுதி அரேபியாவின் குவைத் தூதர் ஷேக் அலி கலீத் அல்-சபா ஆகியோர் அவரை வரவேற்றனர்.

குவைத்திலிருந்து புறப்பட்டதும் இளவரசரை தேசிய சட்டமன்ற சபாநாயகர் மர்சூக் அல்-கானெம், குவைத் தேசிய காவல்படையின் துணைத் தலைவர் ஷேக் மேஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா, ஷேக் நாசர் அல்-முகமது அல்-அஹ்மத் அல்-சபா, பிரதம மந்திரி ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமாத் அல்-சபா மற்றும் குவைத் நாட்டின் சவுதி தூதர் இளவரசர் சுல்தான் பின் சாத் அல்-சவுத் ஆகியோர் சந்தித்தனர்.

மேலும், இளவரசருடன் ஷேக் அஹ்மத் அல்-ஹமூத் அல்-சபா, ஷேக் ஜாபர் துய்ஜ் அல்-சபா, ஷேக் டாக்டர் முகமது சபா அல்-சலீம் அல்-சபா, ஷேக் டாக்டர் அலி சலீம் அல்-அலி அல்-சபா மற்றும் ஷேக் மேஷால் ஜாபர் அல்-அப்துல்லா அல்-சபா, இளவரசர் திவான் ஆலோசகர் டாக்டர் ஹ்மூத் முகமது அல்-ஒடாய்பி, இளவரசர் தலைமைத் தலைவர் ஷேக் முபாரக் பைசல் அல்-சபா, மகுட இளவரசர் திவானின் நெறிமுறைத் தலைவர் ஷேக் முபாரக் சபா அல்-சபா மற்றும் சவுதி அரேபியாவின் குவைத் தூதர் ஷேக் அலி கலீத் ஆகியோர் இவ்விழாவில் இளவரசருடன் சேர்ந்திருந்தனர்.

NEWS : Kuwait Times