குவைத் அமீர் மறைவை தொடர்ந்து அக்டோபர் 4 துக்கநாளாக அனுசரிக்கப்படும் – மத்திய அரசு

India announced oct 4 as condolences day for Kuwait Late Amir
India announced oct 4 as condolences day for Kuwait Late Amir. (Photo : IIK)

குவைத்தில் அமீர் ஷேக் சபா அல்-அகமது அல்-ஜபா் அல்-சபா (91) அவர்கள் காலமானதை அடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியாவில் அக்டோபர் 4ஆம் தேதி துக்கநாளாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஷேக் சபா அவர்கள் இந்திய மக்களால் பரவலாக அறியப்பட்ட அமீர் ஆவார்.

ஷேக் சபா அவர்கள் கடந்த 2006ஆம் ஆண்டு குவைத்தின் அமீராக பொறுப்பேற்று ஆட்சிசெய்து வந்தார்.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

குவைத்தின் மறைந்த அமீர் ஷேக் சபா அவர்கள் குவைத்தின் பொருளாதார உயர்வு மற்றும் அதனை நிலை நிறுத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளார்.

மேலும், வளைகுடா நாடுகளிடையே ஏற்படும் அரசியல் சச்சரவுகளைத் பேசி சமாதானப்படுத்தி தீர்த்துவைப்பதில் ஷேக் சபா அவர்கள் முக்கிய பங்கை வகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

இந்நிலையில், குவைத் அமீர் ஷேக் சபா அல்-அகமது அல்-ஜபா் அல்-சபா அவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று காலமானாா், அவரது மறைவைத் தொடர்ந்து இந்தியாவில் அக்டோபர் 4ஆம் தேதி துக்க நாளாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு வியாழக்கிழமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஷேக் சபா அவர்களின் மறைவைத் தொடா்ந்து, அவரது நெருங்கிய உறவினரும் மகுட இளவரசருமான ஷேக் நவஃப் அல்-அகமது அல்-சபா அவர்கள் அடுத்த அமீராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter