ஈத் அல்-பித்ர் வருகையை முன்னிட்டு குவைத் மக்களுக்கு உரையாற்றிய அமீர்..!!

Kuwait Amir addresses Kuwaitis and expats on upcoming Eid Al-Fitr. (photo : Arab Times)

ஈத் அல்-பித்ர் வருகையை முன்னிட்டு குவைத் மக்களுக்கு உரையாற்றிய அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்கள் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு தனது மகிழ்ச்சியான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அமீர் அவர்கள் உரையின் தொடக்கத்தில் வரவிருக்கும் ஈத் தினத்திற்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார், தாயகத்துக்கும் சேவைக்கும் தங்களை அர்ப்பணித்ததற்காக ஹீரோக்கள் என்று வர்ணித்து குவைத் நாட்டினருக்கு தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

இரவும் பகலும் தங்களை அர்ப்பணித்த அனைத்து ஆர்வலர்களுக்கும், அதாவது மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் அமீர் அவர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்கள், தீயணைப்பு வீரர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், பிற மாநில மற்றும் தனியார் அதிகாரிகள், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தொண்டு மற்றும் கூட்டுறவு சங்கங்கள் என அணைத்து துறையை சேர்ந்தவர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த வைரஸால் காலமானவர்களை நாம் பெருமையுடன் நினைவில் கொள்வது அவசியம், மேலும் அவர்களை சொர்கத்தின் தியாகிகளாக நாங்கள் கருதுகிறோம் என்று அமீர் அவர்கள் தனது உரையில் தெரிவித்தார்.