இந்திய தூதர் சிபி ஜார்ஜ் குவைத் துணை பிரதமருடன் பேச்சுவார்த்தை..!!

Kuwait Ambassodor Deputy PM
Photo credit : Arab Times

குவைத் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் அவர்கள் குவைத் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருமான அனஸ் அல் சலேவை அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் இந்திய தூதரகத்தின் தூதர் சிபி ஜார்ஜ் அவர்கள் நேற்று (அக்டோபர் 21) அன்று குவைத்தின் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருமான அனஸ் அல் சலேவை அவர்களை சந்தித்தாக செய்திகள் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

இருவரும் குவைத் மற்றும் இந்தியாவிற்கும் உள்ள இருதரப்பு உறவுகள் குறித்தும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இருநாடுகளின் உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 நோய்தொற்று பாதிப்பை எதிர்கொள்வதில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து பேசினர்.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

மேலும், குவைத்தில் உள்ள இந்தியர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் இந்த கலந்துரையாடினர்.

இந்தியர்களுக்கு குவைத் அளித்து வரும் தொடர் ஆதரவுக்கு தூதர் நன்றி தெரிவித்தார் என்று செய்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter