குவைத்தில் கடற்கரைகளுக்கு (beach) செல்ல அனுமதி – MOI

kuwait allowed citizens and residents to the beach. (photo : Tripadvisor)

குவைத் உள்துறை அமைச்சகம் சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்தியில், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கடற்கரையில் செல்வதையும் கடற்கரைகளில் இருப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால், இதை பயன்படுத்தி கொரோனா பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்க தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது.

மேலும், குறிப்பாக கூட்டங்கள் கூடுதல் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றங்களை குறைப்பதற்கும், சட்டங்களை மீறுவோரை கட்டுப்படுத்துவதற்கும் கண்காணிப்பு செய்ய நாள் முழுவதும் பாதுகாப்பு ரோந்துகள் இருக்கும் என்று உள்துறை அமைச்சகம் செய்தியில் விளக்கமளித்துள்ளது.

இதையடுத்து கண்டிப்பாக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று எச்சரிக்கை செய்துள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08