குவைத் விமான நிலையம் மூடல்: 600 விமான சேவைகள் ரத்து – பயணிகள் பாதிப்பு!

Kuwait airport closed passenger trouble
(PHOTO: File/AFP)

குவைத் சர்வதேச விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியதால், வெளிநாட்டு பயணிகள் நெருக்கடியில் உள்ளனர்.

ஜனவரி 1ஆம் தேதி வரை விமான நிலையத்தை மூடும் இந்த முடிவு, வெளிநாட்டு பயணிகளுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

COVID-19 தடுப்பூசி மருந்தின் முதல் தொகுதி குவைத்திற்கு எப்போது வந்தடையும்? – அமைச்சர் விளக்கம்!

விமான நிலையம் நீண்ட காலத்திற்கு மூடப்பட்டால், துபாய் வழியாக குவைத் பயணம் செய்பவர்கள் சிக்கலை சந்திப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது விடுமுறை காரணமாக சொந்த பகுதிகளுக்கு சென்ற ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் மற்றும் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் சிக்கலை எதிர்நோக்குவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

குவைத் விமான நிலையம் 10 நாட்களுக்கு மூடப்பட்டதால், 600 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று DGCA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், விமான டிக்கெட் முன்பதிவு செய்த 50,000க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கலில் உள்ளனர்.

நாள் ஒன்றுக்கு 60 விமானங்கள் வரை குவைத் சர்வதேச விமான நிலையம் வழியாக பறக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கான விமானங்கள் தற்காலிக நிறுத்தம் – UAE விமான நிறுவனங்கள்!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter