குவைத்தில் 20,000க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது!

Kuwait COVID-19 vaccine
(PHOTO Credit: Reuters)

குவைத் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி தனது கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தை தொடங்கியதில் இருந்து, 20,000க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக நாட்டின் சுகாதார அமைச்சர் டாக்டர் பாசில் அல் சபா (Dr. Basel Al Sabah) தெரிவித்தார்.

ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை இரண்டாவது தடவையாக போட்டுக்கொண்ட பின்னர், டாக்டர் பாசில் செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

குவைத் நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது

இரண்டாவது தடவையாக தடுப்பூசியை எடுத்துக் போட்டுக்கொண்டவர்கள் மின்னணு தடுப்பூசி சான்றிதழைப் பெறுவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதனை “நோய்எதிர்ப்பு பாஸ்போர்ட்” என்று குறிப்பிட்ட அவர், உலகம் முழுவதும் தடுப்பூசிக்கான சான்றாக அதனை பயன்படுத்தப்படலாம் என்றும் விளக்கி கூறினார்.

தடுப்பூசி போடப்பட்ட 20,000 பேரில், முன்னணி ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

வாரம் முழுவதும் குவைத்திலிருந்து இந்தியா செல்லும் விமானங்கள்!