குவைத்தில் பணமில்லா குடும்பங்களுக்கு உதவுவதில் KRCS கவனம்..!!

KRCS shifts attention to poor back home. (image credit : kuwait times)

குவைத் ரெட் கிரசண்ட் சொசைட்டி (KRCS) என்ற தேசிய மனிதநேய சங்கங்கள் வெளிநாடுகளில் மனிதாபிமான நடவடிக்கைகளைத் செய்துவந்தது, தற்போது குவைத்தில் பணமில்லா குடும்பங்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்களின் வழிகாட்டுதலின்படி கடந்த வாரம் குவைத் தேசிய தின கொண்டாட்டங்களுடன் இணைந்து பல மனிதநேய பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தேசிய நிவாரண அமைப்புகளில் ஒன்றான குவைத் ரெட் க்ராஸ் சங்கம் (KRCS) குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், ஊனமுற்றோர், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் விதவைகள் ஆகியோரின் குழந்தைகளுக்கு உதவுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

Source : Kuwait Times