குவைத்தில் நர்சிங் ஊழியர்களுக்கான அடிப்படை தேவைகளுடன் 115 குடியிருப்புகளை KRCS வழங்கியுள்ளது..!!

KRCS provides 115 apartments with basic needs for nursing staff in Kuwait. (photo : IIK)

குவைத்தில் ஜாபர் அல்-அஹ்மத் குடியிருப்பு பகுதியில் உள்ள குவைத் சுகாதார அமைச்சகத்தின் நர்சிங் ஊழியர்களுக்கான அனைத்து அடிப்படை வாழ்க்கைத் தேவைகளுடனும் 115 குடியிருப்புகளை வழங்கியுள்ளது குவைத் ரெட் கிரசண்ட் சொசைட்டி (KRCS).

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொள்ள அரசாங்க நிறுவனங்களுக்கு உதவுவதற்கும் சுகாதார அமைச்சகத்தின் ஆதரவை வழங்குவதற்கும் சங்கம் மேற்கொண்ட பணிகளை தொடர்ச்சியாக செய்துவருவதாக அல்-சாயர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இருபத்தி மூன்று அடுக்குமாடி கட்டிடங்களுக்கு மேல் விநியோகிக்கப்பட்ட 115 குடியிருப்புகள் வாழ்வதற்கான அனைத்து அடிப்படைத் தேவைகளுடனும் வழங்கப்பட்டுள்ளன, பல்வேறு உணவு கூடைகளும் வழங்கப்பட்டுள்ளன, அவை நர்சிங் ஊழியர்களுக்கு தேவையான தேவைகளை உள்ளடக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் துணை செயலாளர் Dr. முஸ்தபா ரெட்ஹா அவர்கள் இந்த வைரஸ் நெருக்கடியின் தொடக்கத்திலிருந்து அனைத்து துறைகளிலும் KRCS முயற்சிகள் மற்றும் அதன் தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டினார்.