குவைத் நாட்டில் வேலை வாய்ப்பு; சென்னையில்  நேர்காணல்.!

Job offer for Kuwait country.

குவைத் நாட்டில் வேலை வாய்ப்பு நேர்காணல் சென்னையில் வருகின்றன 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ் வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது :

குவைத் நாட்டில் பணிபுரிய 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது இசிஎன்ஆர் பாஸ்போர்ட் உள்ள 25 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட அரபு நாட்டு ஓட்டுநர் உரிமம் பெற்ற வாகன ஓட்டுநர்கள் மற்றும் சமையல்காரர்கள், அரபு உணவு வகைகள் தயாரிப்பவர்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள்.

ஓட்டுநர்க்கு மாத ஊதியம் ₹25,000 முதல் ₹32000 வரை, சமையல்காரர்களுக்கு மாத ஊதியம் ₹25,000 முதல் ₹30,000 வரை மற்றும் இருப்பிடம், விமான பயணச்சீட்டு, மருத்துவச்சலுகை ஆகியவை குவைத் நாட்டில் வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

மேலும், 31 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்ட வீட்டு வேலை செய்யும் பெண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மாத ஊதியம் ₹25,000 முதல் ₹28000 வரை மற்றும் உணவு, இருப்பிடம், விமான பயணச்சீட்டு, மருத்துவச்சலுகை ஆகியவை குவைத் நாட்டின் வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

இந்த பணிக்கான நேர்காணல் வருகிற 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் தங்களின்,

  • கல்வித்தகுதி
  • அனுபவச் சான்றிதழ்
  • புகைப்படம்
  • பாஸ்போர்ட் அசல் மற்றும் நகல்கள்.

ஆகியவற்றுடன் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம், எண்.42 ஆலந்தூர் சாலை, திரு.வி.க.தொழிற்பேட்டை கிண்டி, சென்னை – 32 என்ற விலாசத்தில் உள்ள அலுவலகத்திற்கு 3 ஆம் தேதி காலை 9 மணிக்கு நேரடியாக வர வேண்டும்.

மேலும் வலைதளம் மூலமாக www.omcmanpower.com மற்றும் 044-22505886, 22502267, 9566239685 என்ற தொலைபேசி எண்களின் மூலம் அறிந்து கொள்ளலாம் என தர்மேந்திர பிரதாப் யாதவ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source : TamilMurasu.