குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு மிகக் குறைந்த விலையில் விமான சேவைகளை ஜசீரா ஏர்வேஸ் அறிவிப்பு..!!

Jazeera Airways announces flights to 10 destinations in India from KD30 one way
Jazeera Airways announces flights to 10 destinations in India from KD30 one way. (image credit ; Times Kuwait)

ஜசீரா ஏர்வேஸ் நேற்று (செப்டம்பர் 1) அன்று தனது மிகக் குறைந்த கட்டணங்களை குவைத்தில் இருந்து இந்தியாவின் 10 இடங்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அதாவது ஒரு வழி பயணத்திற்கு 30KD முதல் ஆரம்பமாகும் என்று தெரிவித்துள்ளது.

இந்த குறைந்த கட்டணம் சலுகை செப்டம்பர் 4 முதல் 30 வரை எப்போது வேண்டுமானாலும் பயணிக்க செல்லுபடியாகும் என்று ஜசீரா ஏர்வேஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொச்சி, டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூர், சென்னை, ஜெய்ப்பூர், விஜயவாடா, அமிர்தசரஸ் மற்றும் மங்களூர் ஆகிய 10 இடங்களுக்கு ஜசீரா ஏர்வேஸ் விமானங்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் ஜிலீப் அல் ஷுயோக் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் கொலை..!!

பயணிக்க விரும்புபவர்கள் செப்டம்பர் 1 முதல் jazeeraairways.com, Jazeera App என்ற இணையதளத்தில் அல்லது 177 க்கு வாடிக்கையாளர் சேவையை அழைப்பதன் மூலம் முன்பதிவு செய்யலாம் என்று ஜசீரா ஏர்வேஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணிகள் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதிசெய்ய ஜசீரா ஏர்வேஸ் தனது விமானம் மற்றும் டெர்மினல் 5 ஆகியவற்றில் ஒவ்வொரு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வளைகுடா நாடுகளில் புகையிலை நுகர்வு விகிதங்கள் அதிகம் உள்ள நாடு குவைத் : சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பயணிகள் ஆன்லைனில் செக்-இன் செய்து, தங்கள் போர்டிங் பாஸை ஜசீரா ஆப்பில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் அல்லது வலைத்தளத்திலிருந்து அச்சிட வேண்டும் என்று அறிவியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவர்களின் பயணம் முழுவதும் எல்லா நேரங்களிலும் முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும் என்றும், ஜசீரா ஏர்வேஸின் டெர்மினல் 5 முழுவதும் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய பதிவு சேவை தொடக்கம் – MOI

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms