குவைத்தில் இத்தாலி நாட்டு தம்பதியினரின் வங்கிக்கணக்கிலிருந்து 4000 டாலர் திருட்டு..!!

Italian couple fall prey to scammers – KD 4,000 stolen from account.(iamge source:financial express)

ஒரு இத்தாலிய தம்பதியின் வங்கி கணக்கிலிருந்து மோசடி செய்பவரால் மொத்தம் 4,000 டாலர் திருடப்பட்டதாக அல்-ராய் செய்தி தெரிவித்துள்ளது.

முதல் சம்பவத்தில், 24 வயதான இத்தாலியவை சேர்ந்த ஒருவர் உள்ளூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், இரண்டு எண்களிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகக் கூறினார், அதில் ஒன்று உள்ளூர் எண் மற்றும் இனொன்று சர்வதேச எண்ணிலிருந்து அழைப்பு வந்து அவரது வங்கி கணக்கு புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கூறியதாக கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் மேலும் கூறுகையில், அந்த நபர் இத்தாலியில் உள்ள ஒரு வங்கியின் நிதி மேலாளராக இருப்பதாகக் கூறி, குவைத்தில் உள்ள தனது வங்கியுடன் லிங்க் செய்யவேண்டும் என்று சொல்லி அவரது வங்கி கணக்கின் விவரங்களைக் கேட்டுள்ளார். தேவையான அனைத்து தகவல்களையும் கொடுத்துவிட்டு பின்னர், தனது கணக்கில் இருந்து 2,500 டாலர் திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்

இரண்டாவது சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் அவரது 26 வயது காதலன், இதேபோல் 1,500 டாலரை இழந்துள்ளார். இது தொடர்பாக வங்கி மோசடி வழக்கை பதிவு செய்ய துணை அட்டர்னி ஜெனரல் உத்தரவிட்டதாகவும், இந்த வழக்கை குற்றவியல் புலனாய்வுத் துறையின் (CID) ஆராய்ச்சி மற்றும் புலனாய்வுத் துறைக்கு அனுப்பியுள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

News Source :Arab Times.