குவைத்தில் கூட்டங்கள் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – MOI

Interior Ministry to take strict action on public gatherings
Interior Ministry to take strict action on public gatherings. (Photo : IIK)

குவைத்தில் சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுவோர் மீது, குறிப்பாக கூட்டங்கள் கூடினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் கூட்டங்கள் கூடுவது தொடர்பாக அமைச்சர்கள் குழுவின் அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்படாத எவரும் மற்றும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான சுகாதாரத் தேவைகளைப் புறக்கணிக்கும் நபர்கள் மீது உள்துறை அமைச்சகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!

அரபு செய்தித்தாள் அல் கபாஸ் அறிக்கையின்படி, உள்துறை அமைச்சகம் எந்தவொரு கூட்டங்களுக்கும் கடுமையான சோதனை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோஷியல் மீடியாவில் விளம்பரம் செய்யப்பட்ட சில தனியார் நிகழ்வுகளின் அமைப்பாளர்களை MoI ஏற்கனவே தொடர்பு கொண்டதாக தினசரி செய்தி வெளியிட்டுள்ளது, இது சுகாதார விதிமுறைகளை மீறல்களாக கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!

வணிக வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசங்கள் அணியாதவர்களுக்காக MoI அதிகாரிகள் ஒரு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter