குவைத்திலிருந்து இந்தியாவிற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் தனது சேவைகளை அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளது..!!

IndiGo to operate 23 repatriation flights from Kuwait. (photo : IIK)

குவைத்திலிருந்து 23 விமானங்களை இண்டிகோ ஏர்லைன்ஸ் அடுத்த வாரம் இயக்கும் எனவும் வந்தே பாரத் மிஷன் அடிப்படையில் சேவைகளை வழங்கும் எனவும், இதற்காக சுமார் 4,100 இருக்கைகள் வரையில் தயார் செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது சம்மந்தப்பட்ட விமான நிறுவனம்.

இதற்காக இந்திய தூதரகத்தில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளவுகோல்களின்படி டிக்கெட்டுகள் பெற உரிமை உண்டு எனவும், இதற்காக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் நாங்கள் அனுமதி பெற்றுள்ளோம் என்று இண்டிகோ விமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுபோல் 28 விமானங்கள் தோஹா(கத்தார்), 10 விமானங்கள் மஸ்கட், 36 விமானங்கள் சவுதி ஆகிய இடங்களில் இருந்தும் இண்டிகோ விமானங்களை கேரளாவுக்கு இயங்குகிறது.

இதையடுத்து நான்கு வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவிற்கு மொத்தம் 97 விமானங்கள் மூலம் இண்டிகோ தனது விமான சேவைகளை வழங்கும் என்பது உறுதியாகியுள்ளது.