குவைத் உட்பட வளைகுடாக நாடுகளில் சிக்கித் தவித்த 559 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகை..!!

Indians from gulf including kuwait returns to chennai. (photo : News on Air)

குவைத் உட்பட சூடான், கிர்கிஸ்தான், ஓமன் ஆகிய நாடுகளில் சிக்கித் தவித்த, 559 இந்தியர்கள், நான்கு சிறப்பு விமானங்களில், நேற்று முன்தினம் இரவு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வரும் நிலையில், ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்திய அரசு, ‘வந்தே பாரத்’ என்னும் திட்டத்தை துவக்கியது.

அதன்படி, பல்வேறு நாடுகளில் இருந்தும் விமானங்கள் மூலமாகவும், கப்பல்கள் மூலமாகவும் லட்சக் கணக்கானவர்கள் நாடு திரும்பியுள்ளனர். தொடர்ந்து, சிறப்பு விமானங்கள் மூலமாக மத்திய அரசு இந்த சேவைகளை செய்து வருகிறது.

இந்நிலையில் வளைகுடா நாடுகளான குவைத், சூடான், கிர்கிஸ்தான் மற்றும் ஓமன் போன்ற நாடுகளில் இருந்து நேற்று முன்தினம் இரவு 4 சிறப்பு விமானங்கள் சென்னைக்கு வந்தன.

இந்த விமானங்களில் தகுந்த பாதுகாப்பு அமைப்புகளுடன் 559 இந்தியர்கள் பயணம் மேற்கொண்டனர். அவர்களுக்கு சென்னை விமானநிலையத்தில் தகுந்த மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு அவர்கள் அரசு விதிமுறைகளின்படி, தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08