குவைத் நாட்டில் வாகன விபத்தில் இந்திய இளைஞர் மரணம்..!

Indian youth death in vehicle accident in Kuwait.

இந்திய கேரளா மாநிலம் பத்தணம்திட்டா பகுதியை சேர்ந்த சந்துமோன் (31) இவர்
குவைத் நாட்டில் வேலை செய்து வந்தார்.

இவர், கடந்த மாதம் சாலையில் செல்லும் போது தன்னுடைய வாகனம் பழுதடைந்த நிலையில், சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு வாகனத்தின் பின்புற டிக்கியை திறந்துள்ளார்.

அப்பொழுது, பின்னால் வந்த வாகனம் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

இந்நிலையில், சந்துமோன் குவைத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்‌ என்ற செய்தி வெளியாகியுள்ளது.

துபாயில் வீட்டுவேலை செய்து வந்த சந்துமோனின் தாய் இந்த விபத்தை தொடர்ந்து குவைத்திற்கு வருகைதந்து அவரை கடந்த 25 நாட்களாக பராமரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத் நாட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு உடலை தாயகம் அனுப்பும் வேலைகள் நடைபெற்று வருகிறது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.