இந்தியா-குவைத் நெருங்கிய உறவுகளை உற்றுநோக்கும் பிரதமர் மோடி!

Indian PM Modi Kuwait relationship
Indian PM Modi eyes closer links with Kuwait (PHOTO Credit: PTI)

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய நாட்டிற்கும், அமீர் ஷேக் நவாப் அல் அகமது தலைமையிலான குவைத் நாட்டிற்கும் இடையில் நெருங்கிய தொடர்புக்கான வாய்ப்புகள் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாயன்று, ஷேக் நவாப், குவைத் பிரதமராக ஷேக் சபா அல் காலீத்தை மீண்டும் நியமித்தார். அதன் பின்னர் மோடி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

குவைத்தில் பணியாற்றி வந்த கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி!

கடந்த டிசம்பர் 5ம் தேதி தேர்தல்களுக்குப் பிறகு, குவைத் நாட்டின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் சபா அல்-காலீத் அல்-ஹமாத் அல்-சபாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை மோடி அவரது ட்விட்டர் கணக்கில் கூறினார்.

மேலும், இருதரப்பு உறவுகள் தொடர்ந்து விரிவடைந்து வளர்ச்சி அடையும் என்று நம்புவதாக அவர் கூறினார்.

கிட்டத்தட்ட 1 மில்லியன் இந்தியர்கள் இருக்கும் குவைத் நாட்டுடன், இந்தியா வளரும் உறவுகளைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணவன் குவைத்தில் பணிபுரியும் நிலையில்.. மனைவி தற்கொலை!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter