குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியர்களை மீட்க 14 இந்திய கடற்படைப் கப்பல்கள் தயார்..!!

Indian Navy prepares 14 navy ships to bring back indians from gulfs.

இந்திய கடற்படையின் துணை தளபதி வைஸ் அட்மிரல் அஷோக் குமார் அவர்கள், ANI ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இந்திய கடற்படையின் மேற்கு மற்றும் கிழக்கு கட்டளையகங்கள் சார்பாக தலா 4 கப்பல்கள், தெற்கு கட்டளையகம் சார்பாக 3 கப்பல்கள் மற்றும் அந்தமான் முப்படை கட்டளையகத்தில் இருந்து சில கப்பல்கள் என மொத்தமாக 14 கப்பல்களை இந்திய கடற்படை தயார்நிலையில் வைத்துள்ளதாக தெரிவித்தார்.

அரசு உத்தரவு கிடைத்ததும் கப்பல்களை மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவோம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், கொரோனா தொற்று காரணமாக கப்பல்கள் அனைத்திலும் தேவையான அளவில் மட்டுமே மீட்புப்படையினர் இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

இதை தவிர்த்து இந்திய விமானப்படையின் விமானங்கள் மற்றும் ஏர்-இந்தியா விமானங்கள் மீட்பு பணிக்கு ஆயத்தமாக வைக்கப்பட்டுள்ளன எனவும் அரசு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளது.