தாயகத்திற்குத் திரும்ப விரும்பும் இந்தியர்கள் அவர்களின் செலவை ஏற்க வேண்டியிருக்கும் – இந்திய அமைச்சகம்

Indian expats will have to pay for evacuation cost. (photo : manoramaonline)

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி மே 7 முதல் தொடங்கும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் இப்போது சிக்கித் தவிப்பவர்களின் பட்டியல்களைத் தயாரித்து வருவதாகவும், தாயகத்திற்குத் திரும்ப விரும்புவோர் அவர்களின் செலவை ஏற்க வேண்டியிருக்கும் என்றும் இந்திய அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விமானங்களோ அல்லது கடல் கப்பல்களோ இலவசமாக இருக்காது, திரும்பி வர விரும்புவோர் பயணச் செலவை ஏற்க வேண்டும் என்றும், இது தவிர பயணிகள் ஏறுவதற்கு முன்பு சோதனை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஓமான், பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு 64 விமானங்களை இந்திய அரசு அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மே 7, 2020 முதல் வாரத்திற்கான விமான அட்டவணையின் விவரங்கள் கீழே உள்ளன:

photo : Arab Times