குவைத்தில் பொதுமன்னிப்பு உள்ள இந்தியர்கள் தங்களை மீட்டெடுக்க மத்திய அரசிடம் வேண்டுகோள்..!!

Indian expats in kuwait requested their government to recover them. (photo : newskart)

குவைத்தில் பொது மன்னிப்பு உள்ள இந்தியர்கள் தங்களை மீட்டெடுக்க மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

குவைத்தில் பொது மன்னிப்பு பெற்று நாடு திரும்ப தயாராக உள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய பெண்கள் தங்களை மீட்டுச்செல்ல மத்திய அரசு உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோல, ஆயிரக்கணக்கான ஆண்களும் பொதுமன்னிப்பு பயன்படுத்தி தாயகம் திரும்புவதற்கு தேவையான அனைத்தும் ஆவணங்களும் சரிசெய்து விமானத்தை எதிர்பார்த்து தாயகம் திரும்புவதற்கு வழியின்றி தவித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.