குவைத்தில் இறந்த இந்தியருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

Indian expat WHO died was infected by coronavirus in kuwait.

அல்-அமிரி மருத்துவமனையின் இயக்குநர் Dr. Ali Alalanda அவர்கள் மாரடைப்பால் இறந்த இந்தியரின் பிரேத பரிசோதனையில் அவர் கொரோனா வைரஸ் (COVID-19) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது மரணத்தை கொரோனா வைரஸ் தொற்றுடன் இணைப்பது உலக சுகாதார அமைப்பால் தீர்மானிக்கப்படும் என்று Dr. Ali Alalanda அவர்கள் குவைத் செய்தி நிறுவனத்திற்கு (KUNA) அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நோயாளியாக இருந்த அவரை அமிரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார், ஆனால் அவர் மருத்துவமனைக்கு வந்த ஓர் சில நேரத்தில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.