குவைத்தில் Bnied AL-GAR பகுதியில் இந்தியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!!

Indian expat commits suicide in Bneid AL Gar. (photo : Arab Times)

குவைத்தில் ஃபர்வானியா பகுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்கொலை செய்து கொண்ட ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் மற்றும் ஒரு இலங்கையர் சபா அல்-நாசரில் உள்ள தனது ஸ்பான்சர் இல்லத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட 48 மணி நேரத்திற்குப் பிறகு, தற்போது Bnied AL-GAR பகுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் இதுபோன்று தொடர்ந்து வெளிநாட்டினரின் தற்கொலை வழக்குகள் தொடர்ந்து வருகிறது.

உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு மூல கட்டுப்பாட்டு அறையின்படி, Bnied AL-GAR பகுதில் தற்கொலை குறித்த தகவல் கிடைத்தது, பாதுகாப்பு குழு அவர் இந்தியாவை சேர்ந்தவர் (1975 இல் பிறந்தவர்) மின்சார கம்பி பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டதை கண்டுள்ளனர்.

மேலும், இதுகுறித்து தடயவியல் ஆதாரங்களுடன் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.