தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்கள் விபரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தல் – குவைத் இந்திய தூதரகம்

Indian Embassy in kuwait provide a link for those who wish to return homeland.

குவைத்தில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம் செல்ல விரும்பினால் குவைத் இந்திய தூதரகம் சார்பாக வெளியிட்டுள்ள இணையதளத்தில் தங்கள் விபரத்தை பதிவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்திய தூதரகத்தின் இணையதள link : http://indembkwt.com/eva/

மேலும், தாயகம் திரும்புவதற்கு விருப்பமுள்ள இந்தியர்களின் விபரங்களை சேகரிப்பதே இதன் நோக்கம் என்றும், இந்தியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய அரசு எப்போது முடிவு எடுக்கிறதோ அப்போது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தூதரகம் வலைத்தளம் மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளில் அறிவிப்பை வெளியிடும் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.