குவைத்திலிருந்து தாயகம் திரும்புவதற்கு மற்றும் புதிதாக பதிவு செய்வதற்கு முயற்சி செய்யும் நபர்களின் கவனத்திற்கு..!!

Indian embassy in kuwait announcement on temporary suspend of online services. (photo : Times kuwait)

குவைத்தில் உள்ள இந்திய நாட்டினரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான உள்ள குழப்பங்களை தெளிவுபடுத்துவதற்கு இந்திய தூதரகம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவுக்கு செல்ல விரும்பும் குவைத்தில் உள்ள இந்திய நாட்டினருக்கான தூதரகத்தின் இணையத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செயல்முறை நேற்று (மே 15) முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாயகம் திரும்புவதற்கு ஆரம்ப முதல் தற்போது வரையில் பதிவு செய்தவர்களுக்கு தாயகம் திரும்புவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்ட பின்னர் மீண்டும் இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மருத்துவ அவசரநிலை, கர்ப்பிணி பெண்கள் தாயகம் திரும்புவது மற்றும் இறப்பு தொடர்பான முன்னுரிமை கோரிக்கைகள் நிறைவேற்ற தேவையான பரிசோதனை மற்றும் செயலாக்கத்திற்காக cw.kuwait@mea.gov.in என்ற தூதரகத்திற்கு மின்னஞ்சல் முகவரியில் தொடர்ந்து வேண்டுகோள் அனுப்பப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணக் கோரிக்கைகளைத் தேர்ந்தெடுத்து ஆவணங்களை சரிபார்த்து முன்னுரிமை அளிக்க குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. குவைத் இந்திய தூதரக அனுமதி இல்லாமல் அங்கீகரிக்கப்படாத நபர்கள் மூலம் வழங்கப்படுகிற உத்தரவாதங்களுக்கு தூதரகம் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்திலிருந்து தற்போது வரையில் சிறப்பு விமானத்தில் தாயகம் அனுப்பப்படும் இந்தியர்களுக்கு விமான பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு / வழங்கல் / விற்பனை செய்வதற்கான அதிகாரம் உள்ள ஒரே நிறுவனம் ஏர் இந்தியா மட்டுமே.

மேலும், எந்த ஒரு சந்தேகமான கேள்விகளுக்கும், பின்வரும் தூதரகத்தின் அதிகாரபூர்வ எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை நீங்கள் பயன்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் : cw.kuwait@mea.gov.in, cw1.kuwait@mea.gov.in
தொலைபேசி : +965 66501391, +965 97610246, +965 97229945