குவைத்தில் 500 மது பாட்டில்களுடன் இந்தியர் ஒருவர் கைது..!!

Indian caught with 500 liquor bottles. (image credit : arab Times )

குவைத்தின் ஹவாலி பகுதியில் இந்தியர் ஒருவர் 500 மது பாட்டில்களுடன் காவல் துறையினரிடம் பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தனியார் வாடிக்கையாளர்களுக்கு பாட்டில்களை வழங்குவதற்காக சென்று கொண்டிருந்த போது ஹவாலி பகுதியின் பாதுகாப்பு துறையினர் இவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் PAM துறைகளில் பணியாற்றும் தொழிலார்களுக்கு COVID-19 நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது..!!

அந்த இந்தியரிடம் 500 உள்ளூர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மது பாட்டில்கள் வைத்திருந்ததாக ஹவாலி பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹவாலி பாதுகாப்பு இயக்குநரகத்தின் பாதுகாப்பு துறையினர் ரோந்துப் பணிகளில் இருந்தபோது நான்கு சக்கர வாகனம் ஒன்று அசாதாரணமான முறையில் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திலிருந்து ஒரு நாளைக்கு 1,000 இந்தியர்களை தாயகம் கொண்டுவர ஒப்புதல்..!!

மேலும், அந்த வாகனத்தை சோதனை செய்தபோது 500 பாட்டில்கள் மதுபானம் கிடைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது, அந்த இந்தியரை சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் மார்ச் 13க்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ரத்து..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms