அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்; இந்தியாவில் மேலும் இருவர் உறுதி..!

India reports new COVID-19 Cases on March 2nd
India reports new COVID-19 Cases on March 2nd

இந்தியாவில் மேலும் இரண்டு புதிய கொரோனா வைரஸ் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் இன்று (மார்ச் 2) தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை பெரிதும் அச்சுறுத்தி வரும் இந்த மர்மமான கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவத்தொடங்கியது.

சீனா, ஈரான், இத்தாலி போன்ற உலக நாடுகளில் தற்போது வரை இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவிலும் கேரள மாநிலத்தில் மூன்று பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தனர்.

இந்நிலையில், மேலும் 2 பேர் இந்த வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் இத்தாலியில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவர் மற்றும் தெலங்கானவை சேர்ந்த ஒருவர் என்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இருவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.