குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்த இந்தியர் மரணம்..!

India man died in Kuwait country

குவைத் நாட்டில் ஜலீப் (JLEEB) பகுதியில் கடந்த 14 வருடங்களாக வேலை செய்து வந்த ராமமூர்த்தி (48) என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இவர் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்ட கூடூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

ராமமூர்த்தி தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் அவருடைய தொலைபேசிக்கு அழைத்த போது அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்த குடும்பத்தினர் ராமமூர்த்தியின் நண்பரிடம் தொடர்பு கொண்டு இதுபற்றி கூறியுள்ளனர்.

ராமமூர்த்தியின் நண்பர் அவர் தங்கியிருந்த இடத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது, காவல்துறை அதிகாரிகள் ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். இதையடுத்து அவரது நண்பர் விசாரித்ததில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு ஏற்கனவே வலிப்பு நோய் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. ராமமூர்த்திக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குவைத் சட்ட நடவடிக்கைகள் முடித்து உடலை விரிவாக தாயகம் அனுப்பும் பணிகளை அவருடைய நண்பர் செய்து வருகிறார். இன்று (19-01-2020) இரவு அல்லது நாளை உடல் தாயகம் அனுப்பி வைக்கப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.