குவைத் நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது

குவைத் நாட்டிற்குள் கடல் வழியாக சட்டவிரோதமாக நுழைந்த 10 ஈரானிய நாட்டினர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டதாக அல் ராய் தெரிவித்துள்ளது.

குவைத்தின் தெற்கே மினா அப்துல்லா பகுதியில் கப்பல் ஒன்றில் இருந்து அவர்கள் இறங்குவதைக் குவைத் நாட்டவர் ஒருவர் கண்டதாக அதில் கூறப்படுகிறது.

வாரம் முழுவதும் குவைத்திலிருந்து இந்தியா செல்லும் விமானங்கள்!

சிலர் பிடிபடாமல் இருக்க குப்பைத் தொட்டிகளிலும், அக்கம்பக்கத்து தங்கும் இடங்களிலும் பதுங்கியிருந்ததாகவும் கூறப்பட்டது.

அவர்களின் உடமைகளில் போதைப்பொருட்களைக் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் அல் ராயிடம் தெரிவித்தனர்.

கூடுதலாக அந்த உடமைகளில் எந்தவிதமான ஆயுதங்களையும் கண்டுபிடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.